Tuesday, March 30, 2010

அழகு குறிப்புகள்


ஸ்ப்பா என்னா வெயில்.. ரொம்ப வெயிலா இருக்கு. மாமிகூட ஷாப்‍பிங் போனேன். நல்ல வெயில். இங்கேயே இப்படி இருக்கே.,கல்ப் நாடுகள்ல வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குமாமே ஜலீலா அக்கா. அப்படியா..

இந்த வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எனக்கு தெரிந்த சில அழகுகுறிப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


வெயிலில் நம்முகம் வறட்சியாகிவிடாமல் அழகுடன் பொலிவுடன் இருக்க

சிறிதளவு கோதுமை மாவும் 2 ஸ்பூன் சீனியும் எடுத்து இரண்டையும் கொஞ்சம் தண்ணீர்விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும்.

ஒரு பஞ்ச் வைத்துக் கொள்ளவேண்டும்.

பிசைந்த மாவை நம்முகத்தில் நன்றாக அப்பிக் கொண்டு அப்படியே 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.

பின்னர் பஞ்சைக் கொண்டு முகத்தில் ஒட்டி இருக்கும் மாவுத்துகள்களை நீக்கவேண்டும்.

நல்ல குளிர்ந்த தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவினால் நம்முடைய முகத்துக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். முகம் பொலிவு பெறும்.

வெள்ளரிக்காவை வட்டமாக வெட்டி இரு கண்களில் ஒற்றி எடுத்தால் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.


அதுபோல வெயிலில் செல்லும்போது நம் ஆடைகள் சைனிங் போகும். முக்கியமா பர்தா, சேலை கலர் வெளிறிவிடும். அதற்கு துணிகளை துவைப்பதற்கு முன்னால் ஷாம்பூ கரைசலில் சிறிதுநேரம் முக்கி எடுத்து பின்னர் சோப்பு பவுடரில் துணிகளை துவைத்தால் துணிகளின் கலர் மாறாது.


அன்புள்ள தோழிகளே!! இதுபோன்று உங்களுக்கு தெரிந்த அழகுகுறிப்புகளை தெரியப்படுத்துங்கள்.


உங்கள் கருத்துக்களை வேண்டி உங்கள் மின்மினி...


,

Monday, March 29, 2010

விருது வாங்கியாச்சு உங்கள் மின்மினி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்புள்ள தோழிகளே!! நண்பர்களே!! இதோ உங்கள் அன்பினால் உருவான உங்கள் மின்மினி எழுதும் மடல். நான் நேற்றுதான் வலைப்பூ ஆரம்பித்தேன். சும்மா இருந்த என்னையும் இந்த வலையுலகில் எழுதவைத்து ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த என்னவருக்கு நன்றிகள். முதல் இடுகையை வெளியிட்டு கருத்துக்களையும் உங்கள் ஆதரவையும் எதிர்பார்த்த எனக்கு முதல் நாளே அமோக ஆதரவு கொடுத்து ஊக்கமும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

ஸ்டார்ஜன் சார் அவர்கள் ஒருபடி மேலேபோய் எனக்கு விருது கொடுத்து வாழ்த்தியிருக்கிறார். என்னவென்று சொல்வது நன்றிதனை.

நன்றி நன்றி ஸ்டார்ஜன் அவர்களே!!...

நான் புதியவள் என்பதால் யார்யாரெல்லாம் விருது வாங்கியிருக்காங்கன்னு தெரியல. இருந்தாலும் நான் இவர்களுக்கு அன்போடு வழங்கிகின்றேன்.

ஹூசைனம்மா அக்கா

ஆசியா உமர் அக்கா

நாடோடி சார்

சித்ரா அக்கா

துபாய் ராஜா சார்.

தொடர்ந்து எனக்கு ஊக்கமும் ஆதரவும் கொடுத்து உங்களில் ஒருவளா ஆக்கவேண்டியது உங்க பொறுப்பு.

நன்றிகள் அனைவருக்கும்...

உங்கள் கருத்துக்களை வேண்டி உங்கள் மின்மினி.

,

Sunday, March 28, 2010

உடனடி வெள்ளானம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்புமிக்க தோழிகளே!! நண்பர்களே !!

சமையல் கலை என்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த அவசர யுகத்தில் எளிதாக செய்யக்கூடிய வெள்ளாணம் எப்படி தயாரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம். இதனை சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

தேங்காய் ‍‍‍சிறிதளவு
வெங்காயம் பல்லாரி ‍_ 2 ( தாளிப்பதற்கும் சேர்த்து )
தக்காளி 2
சீரகம் சிறிதளவு
புளி சிறிதளவு
மிளகாய் 3
மஞ்சள்தூள் 1/4 சிறிய ஸ்பூன்
கடுகு உளுந்தம்பருப்பு தாளிக்க
கறிவேப்பிலை தாளிக்க‌
மிளகாய் வற்றல் தாளிக்க‌
உப்பு தேவையான அளவு

முதலில் தேங்காய், சீரகம், புளி, தக்காளி, மஞ்சள்தூள் இவற்றையெல்லாம் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து தயாராக வைத்துக் கொள்ளவேண்டும்.

வாணலியில் சிறிதளவு எண்ணைவிட்டு தாளிக்க வேண்டிய பொருள்களான கடுகு உளுந்தம்பருப்பு வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய்வற்றல், தாளித்துக் கொள்ளவேண்டும்.

பின்னர் மிக்ஸியில் அரைத்த விழுதுவை தாளித்த பாத்திரத்தில்விட்டு உப்பு சேர்த்து லேசாக சூடுகாட்டினால் (கொதித்து விடக்கூடாது) சுவையான வெள்ளாணம் தயார்.

இதனுடன் ஏதாவது பொறியல் கூட்டு வைத்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சுவையான மதிய உணவு ரெடி.

நீங்களும் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்

உங்கள் கருத்துக்களை வேண்டி உங்கள் மின்மினி.


,

முதலாய் நானே ...


முதலாய் நானே
முடிவுவரை நானே
ஒவ்வொரு மொழியை
அறிவதும் நானே

உன் செல்ல‌
கோபங்கள் எனக்கு
மகிழ்ச்சியே தருமே
நான் தரும் இன்பங்கள்
உனக்கு இன்பமாய்
நீ தவறிழைக்கையில்
என் கோபமெல்லாம்
நீ வருந்தும்போது
செல்லமாய் உன்மேல்

நீ என்னை நினைக்கையில்
நான் உன்னருகிலே
கவிதை வரிகளுக்கும்
அப்பாற்பட்டது நம் உறவு
நாளும் நலம் பெற‌
நாடியவன் அருள் புரிவான்.

,

Saturday, March 27, 2010

நுழைவாயில்

எல்லோருக்கும் என் அன்புகலந்த வணக்கங்கள். வலைபக்கம் ஆரம்பிக்க எனக்கு ரொம்ப நாளா ஆசை. அது இப்போதான் நிறைவேறி இருக்கு என்று நினைக்கிறேன். என் சிந்தனைகளில் உதிக்கும் கருத்துக்களை உங்கள்முன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் மேலான் ஆதரவை வேண்டி உங்கள் மின்மினி.

உங்கள் மின்மினி .

,